Friday, 5 August 2016

அதர்மம் அழிப்போம்

அதர்மத்தை அழிப்போம்



                         தர்மம் காக்கப்பட வேண்டும்... ஆனால் அதைவிட முக்கியமானது அதர்மம் அழிக்கப்படவேண்டும்..

நாம் ஏன் அதர்மத்தை அழிக்க வேண்டும்???

தர்மத்தை காத்தால் மட்டும் போதாதா???


தர்மத்தை காக்க நாம் தர்மவாதிகளிடமும் தர்ம உணர்வுள்ளவர்களிடமும் தர்மத்தை காப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்... நம் மக்களும் விழிப்புணர்வு அடைவார்கள்.. ஆனால் தர்மத்தை காக்க முடியுமா???

நாம் தர்மத்தை தர்மவாதிகளை வைத்து ஒருபுறம் காத்துக்கொண்டே இருந்தாலும் அதர்மமும் அதர்மவாதிகளும் ஒரு புறம் பெருகிக்கொண்டே இருப்பார்கள்.. அதர்மவாதிகளின் பலம் பெருகும்போது தர்மவாதிகளுக்கு பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் தர்மத்திற்கு அதர்மத்தால் துன்பங்கள் அதிகரிக்கும்...

அதனால் தான் ஒவ்வொரு செயலிலும் வருமுன் காப்பதே சிறந்தது.
ஆனால் வருமுன் காக்க தவறிவிட்டோம் வந்தபின்னாவது காப்போம்


அதர்மவாதிகளும் அதர்மங்களும் அக்கிரமங்களும் அதிகரித்து விட்டது. இனியும் தர்மம் காத்து அதர்மத்தை அழிக்காமல் விடக்கூடாது...

அதர்மத்தையும் அதர்மவாதிகளையும் அடியோடு அழித்தால் தர்மமும் தர்மவாதிகளும் தன்னால் காக்கப்படுவார்கள்..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்...

தர்மம் வெல்ல வேண்டுமென்றால் அதர்மம் அழிக்கப்படவேண்டும்.. அதர்மத்தை அழித்தல் ஒன்றே தர்மத்தை காப்பதற்கான வழி

அதர்மத்தை அழிக்க பகவான் நாராயணன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அவதாரமாக தோன்றி அதர்மவாதிகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டிக்கொண்டுதான் இருக்கிறான்.. அதர்மத்தை அழித்தால் தர்மம் தானாக நிலை நாட்டப்படும்.


அதர்மத்தை அழிக்க ஒவ்வொரு முறையும் இறைவன் அவதாரம் எடுக்க வேண்டுமென்றால் அவன் தினம் தினம் அவதாரம் எடுக்கவேண்டி வரும்.. அதர்மத்தை அழிக்கும் வல்லமையுடைய நாராயணன் வேறெங்கும் இல்லை நமக்குள்ளே தான் இருக்கிறான். அவனது சக்தியை கொண்டு அதர்மத்தை அழிக்கவேண்டியது நம் கடமை..





ஆதலால் எப்போதும் நாம் செய்ய வேண்டியதும் சொல்லவேண்டியதும் ஒன்றுதான்

தர்மம் காக்கப்படவேண்டும் என்பதை விட
அதர்மம் அழிக்கப்படவேண்டும்


ஜெய் ஶ்ரீராம்
ஹர ஹர மஹாதேவாய நமஹ

No comments:

Post a Comment