Sunday, 14 August 2016

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே

தேசத்தந்தை நேதாஜி
தேச துரோகி நேரு & காந்தி
இந்த பாரதத்தின் சுதந்திரம் வாங்கி தந்தது காந்தி நேருவின் அகிம்சை கோழைத்தனமா???
கிடையவே கிடையாது
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் (INA) படை வீரத்தை பார்த்த வெள்ளையனுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது இதற்கு மேல் பாரதத்தை அடிமைப்படுத்த முடியாது என்று நினைத்தான்
இதற்கு மேல் இங்கிருந்தால் INA வினர் ஆங்கிலேயன் இருந்ததற்கான சுவடு இல்லாமல் அழித்துவிடுவார்கள் என்று பயந்தான்
பயந்து ஓடினால் கவுரவம் போய்விடுமே என்ன செய்வது என்று நினைத்து காந்தி நேரு என்ற இரண்டு  தேச துரோகிகளின் துணையுடன் நேதாஜியை நாடு கடத்தினான்
காந்தியின் அகிம்சைக்காக சுதந்திரம் தருகிறோம் என்று உலகத்தை நம்ப வைத்து சுதந்திரம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்
இந்த தேச சுதந்திரம் நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் எனும் மாவீரனால் மட்டுமே கிடைத்தது.
இந்த வரலாற்றை மறைக்கவே காங்கிரஸ் கையில் தேசத்தை ஒப்படைத்தான்
இந்த பாரதத்தில் தேச தந்தை என்று போற்றும் பெருமை நேதாஜி அவர்களுக்கு மட்டுமே.
நேதாஜி பற்றிய  அருமையான பாடல் இது
கேட்கும்போதெல்லாம் நெஞ்சில் ஒரு வேகம் உண்டாகும்
பாரத் மாதா கீ ஜே
சும்மா  கிடைக்க சுதந்திரம் என்ன -சுக்கா
மிளகா  கிளியே ....!
அடிமைகள்  உடம்பில்  வலிமைகள் செலுத்த  
வீரன்  வந்தான்  வெளியே ....!
இதுவரை  தொடர்ந்த  பழங்கதை  எல்லாம்
புரண்டு  போனதே  தோழா ...!
வெற்றியின்  விதைகள்   விழியில்  தெரித்ததே 
தோல்விகள்  இல்லை  தோழா ...!
                                        
                                                             (சும்மா  கிடைக்க சுதந்திரம்)
ஆழியும்  புலமும்  நம்  பெயர்  சொல்லும் 
அடுத்தவன்  ஆழ  உரிமை  இல்லை ...!
நிழலுக்கு  கூட  ஆயுதம்  தந்து 
உரிமையை  வெல்லுமே  எங்கள்  படை ....!
யார்க்கும்  இளைத்தவர்  இல்லை  -இங்கே
பூனையும்  கோலை  இல்லை ...!
ஆண்  பெண் படையணி  நாங்கள்  - எங்களை
வென்றிட  எவனும்  இல்லை ...!
வெடிப்புடன்   கிளர்திடும்  வீரம்  - எங்கள் 
மண்ணின்  வாசம்  இது ....!
உரிமையின்  முழக்கம்  கேட்டு  - எல்லா
விதைகளும்  நொறுங்கியது ...!
                                                          (சும்மா  கிடைக்க சுதந்திரம்)

Friday, 5 August 2016

அதர்மம் அழிப்போம்

அதர்மத்தை அழிப்போம்



                         தர்மம் காக்கப்பட வேண்டும்... ஆனால் அதைவிட முக்கியமானது அதர்மம் அழிக்கப்படவேண்டும்..

நாம் ஏன் அதர்மத்தை அழிக்க வேண்டும்???

தர்மத்தை காத்தால் மட்டும் போதாதா???


தர்மத்தை காக்க நாம் தர்மவாதிகளிடமும் தர்ம உணர்வுள்ளவர்களிடமும் தர்மத்தை காப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்... நம் மக்களும் விழிப்புணர்வு அடைவார்கள்.. ஆனால் தர்மத்தை காக்க முடியுமா???

நாம் தர்மத்தை தர்மவாதிகளை வைத்து ஒருபுறம் காத்துக்கொண்டே இருந்தாலும் அதர்மமும் அதர்மவாதிகளும் ஒரு புறம் பெருகிக்கொண்டே இருப்பார்கள்.. அதர்மவாதிகளின் பலம் பெருகும்போது தர்மவாதிகளுக்கு பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் தர்மத்திற்கு அதர்மத்தால் துன்பங்கள் அதிகரிக்கும்...

அதனால் தான் ஒவ்வொரு செயலிலும் வருமுன் காப்பதே சிறந்தது.
ஆனால் வருமுன் காக்க தவறிவிட்டோம் வந்தபின்னாவது காப்போம்


அதர்மவாதிகளும் அதர்மங்களும் அக்கிரமங்களும் அதிகரித்து விட்டது. இனியும் தர்மம் காத்து அதர்மத்தை அழிக்காமல் விடக்கூடாது...

அதர்மத்தையும் அதர்மவாதிகளையும் அடியோடு அழித்தால் தர்மமும் தர்மவாதிகளும் தன்னால் காக்கப்படுவார்கள்..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்...

தர்மம் வெல்ல வேண்டுமென்றால் அதர்மம் அழிக்கப்படவேண்டும்.. அதர்மத்தை அழித்தல் ஒன்றே தர்மத்தை காப்பதற்கான வழி

அதர்மத்தை அழிக்க பகவான் நாராயணன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அவதாரமாக தோன்றி அதர்மவாதிகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டிக்கொண்டுதான் இருக்கிறான்.. அதர்மத்தை அழித்தால் தர்மம் தானாக நிலை நாட்டப்படும்.


அதர்மத்தை அழிக்க ஒவ்வொரு முறையும் இறைவன் அவதாரம் எடுக்க வேண்டுமென்றால் அவன் தினம் தினம் அவதாரம் எடுக்கவேண்டி வரும்.. அதர்மத்தை அழிக்கும் வல்லமையுடைய நாராயணன் வேறெங்கும் இல்லை நமக்குள்ளே தான் இருக்கிறான். அவனது சக்தியை கொண்டு அதர்மத்தை அழிக்கவேண்டியது நம் கடமை..





ஆதலால் எப்போதும் நாம் செய்ய வேண்டியதும் சொல்லவேண்டியதும் ஒன்றுதான்

தர்மம் காக்கப்படவேண்டும் என்பதை விட
அதர்மம் அழிக்கப்படவேண்டும்


ஜெய் ஶ்ரீராம்
ஹர ஹர மஹாதேவாய நமஹ

Tuesday, 2 August 2016

பிடி சாம்பல்தான்

ஓம் நமசிவய
ஓம் நமோநாராயணாய


ஏதோ எனக்குள் வந்த உளரல் படிக்க பிடித்தால் படியுங்கள் இல்லையேல் படிக்காதீர்கள்

!!!!!அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!!!!!

!!!!!மானிடனாய் பிறந்தாலும் அதனினும் அரிது இறைவனை ஒருமுறையேனும் கண்ணால் காணா விடினும் உள்ளூர உணர்ந்து அவன் நாமம் உச்சரிக்கும் பாக்கியமுடையவனாய் பிறத்தல் மிக மிக அரிது.!!!!!


நான் இங்கே சொல்வதெல்லாம் ஏற்கனவே நம் முன்னோர்கள் பலர் கூறிச்சென்றது தான். இதில் வார்த்தைகள் இடம் மாறி வரலாமே தவிர இதையெல்லாம் பேசுவதற்கு நான் ஒன்றும் ஞானியுமல்ல இதை படிக்கும் அனைவரும் ஏதும் தெரியாதவர்களுமல்ல.

என்னை விட உயர்ந்தவர் எவருமில்லை

என்னை விட தாழ்ந்தவரும் எவருமில்லை



இவனுக்கென்ன எப்பொழுதும் இப்படி ஏதாவது உளருவதொன்றே வேலை,,, ஒரு வேலை பைத்தியம் பிடித்துவிட்டதோ??? என்று ஏளனம் செய்வோர் பலருண்டு..

என்ன செய்ய எல்லாம் ஈசனது திருவிளையாடலே...

அவனொருவன் ஆட்டுவிக்கிறான் இங்கே நாம் ஆடுகிறோம் அவன் ஆட்டுவிப்பதை நிறுத்திவிட்டால் நம் ஆட்டமும் இங்கே ஆட்டம் கண்டுவிடும் என்பதை ஏனோ உணர மறுக்கிறோம்...

நமக்கென்று அவன் ஒரு கணக்கை போட்டுதான் நம்மை ஆட வைக்கிறான் அந்த கணக்கிற்கான விடை தெரியாமல் இருக்கும்வரை சிற்றின்பங்கள் மட்டுமே பேரின்பமாக தெரியும்.

கணக்கையும் கொடுத்துவிட்டு விடையையும் அவனே கொடுத்துவிட்டால்!? எல்லாமே நான் தான் என்னால் எதையும் செய்ய முடியும் என்று ஆட்டம் போடும் நமக்கெல்லாம் என்ன வேலை...

என்னால் அனைத்தையும் செய்யமுடியும் என்றால் கணக்கை நாமே போட்டுப்பார்க்க வேண்டும் விடையை தேடிப்பார்க்க வேண்டும்!!!

வாழ்நாள் முழுக்க தேடினாலும் ஒருநாளும் கிடைக்காது..

ஆனால் மனமுருகி அந்த சர்வேசனிடம் கேட்டுப்பார்த்தால் நிச்சயம் அதற்கான தெளிவான விடையினை ஏதேனும் ஒரு வழியில் எல்லாமாகிய ஈசன் நமக்கு கொடுப்பான்...



புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்.........

என்று மாணிக்கவாசகப் பெருமான் இந்த ஆத்மாவின் பிறப்பு பற்றி தெளிவாக
சிவபுராணம்தனிலே கூறியுள்ளார்.

இந்த ஆத்மா இந்த மனிதனின் உடலுக்குள் இருக்கும் வரை தான் அதற்கொரு
பெயரிட்டு அழைப்போம். இந்த உடல் இறந்து ஆத்மாவானது மீண்டும் ஏதேனும்
ஒரு விலங்காக பிறந்தால் அந்த மிருகத்தின் பெயரை சொல்லியே அழைப்போம்...

பிறப்பும் இறப்பும் உடலுக்கு மட்டும் தான்..

ஆத்மாவிற்கு ஒருபோதும் பிறப்பும் இறப்பும் கிடையாது என பகவான் ஸ்ரீகிருஷ்ணன்
கீதையில் சொல்லிவிட்டார்...

ஆனால் எல்லாப்பிறப்பிலும் உயர்பிறப்பான மனிதப்பிறப்பை எடுத்த பின்னும்
நாம் ஒருபோதும் உண்மையினை உணர்வதில்லை...

மனிதனாய் பிறந்து இந்த நாகரீக உலகில் வாழ சில உபகரணங்கள் தேவைப்படுகிறது..
உடுத்த உடை, இருக்க வீடு, உயிர்வாழ உணவு....

இவையனைத்தும் இருந்தாலும் மற்றவனை பார்த்து வாழவே ஆசை(பேராசை)ப்படுகிறோம்..
மற்றவனைப்பார்த்து அவனைப்போல நம்மிடம் பணமில்லையே,
அழகான உடையில்லையே, சொகுசான வீடில்லையே என
ஒவ்வொரு நாளும் பைத்தியமாய் திரிவோர் பலர் உண்டு...


செல்வம்(பணம்) என்பது மனித வாழ்க்கைக்கு தேவை தான்
ஆனால் அது தான் வாழ்க்கை என்று நினைத்துவிட்டால்
இங்கே வாழும் வாழ்க்கை நரகம் தான்...

பணம் தான் வாழ்க்கை என்று நினைப்பவன் ஒவ்வொரு விசயத்திலும்
நிம்மதி இழக்கிறான்
தினம் 100 ரூ சம்பாதிப்பவன் 1000 ரூ சம்பாதிக்க நினைத்து நிம்மதி இழக்கிறான்.
1000 சம்பாதிப்பவன் 10000 சம்பாதிக்க நினைத்து நிம்மதி இழக்கிறான்
10000 சம்பாதிப்பவன் 100000 சம்பாதிக்க நினைத்து நிம்மதி இழக்கிறான்...

தான் நினைத்த வரை சம்பாதிக்க தொடங்கிய பின் வேறொருவனை
பார்த்து அவனை விட நம் வருமானம் குறைவாக உள்ளதே என நினைத்து நிம்மதி
இழக்கிறான்

கோடிக்கணக்கில் சம்பாதித்து சொத்து சேர்த்தவன் அதை எப்படி காப்பது என்று மட்டுமே நினைத்தானேயானால்
அதனால் அவனும் நிம்மதி இழக்கிறான்...

உலகில் முதல் கோடீஸ்வரனுக்கு நாம் தான் எப்போதும் முதலிடத்தில் இருக்க
வேண்டும் என நினைத்து மேலும் மேலும் பணத்தின் மீது பைத்தியம் பிடித்து நிம்மதி இழக்கிறான்...

ஆனால் இந்த பணத்தை மிஞ்சி ஒரு வாழ்க்கை உண்டு...
பசியால் வாடும் ஒருவருக்கு மூன்று நேரம் உணவளிக்க முடியவில்லை என்றாலும்
ஒரே ஒரு வேளை உணவினை வாங்கி கொடுத்தால் அந்த அப்பாவியின்
கண்ணிலிருந்து ஒரு பெரிய மகிழ்ச்சி தெரியும். அது தான் உண்மையான நிம்மதி.


கோடி கோடியாய் சேர்த்து வைக்கலாம் தவறில்லை
ஆனால் அந்தக்கோடியும் இந்த பூமித்தாய் ஒரு ஆட்டமிட்டால்
நாமும் தெருக்கோடி தான் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்பவன்
மனதில் ஒருபோதும் செல்வம் குறித்த கவலை வராது...

அதற்காக சம்பாதிக்காமல் இருந்துவிடலாமா???

நிச்சயம் சம்பாதிக்க வேண்டும்..

நம் வாழ்க்கைக்காக நம் வாழ்வில் நிறைவேற்றவேண்டிய கடமைகளுக்காக
இந்த நாகரீக உலகில் மனிதர்கள் மத்தியில் வாழ நினைத்தால் நிச்சயம் சம்பாதிக்க வேண்டும்..
சம்பாதிக்கும் பணத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தாமல் நம் அத்தியாவசிய
தேவை போக சேமித்து வைக்க நினைக்கும் பணத்தில் 100 சதவீதத்தை
பொதுச்சேவைகளுக்கு பயன்படுத்தவில்லை என்றாலும்
1 சதவீதத்தையாவது நற்காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்...

சுயநலத்திற்காக மட்டும் எத்தனை கோடியை சேர்த்தாலும் ஆத்மா பிரிந்த இந்த உடலை


குழிக்குள் தள்ளும்போது கட்டியிருக்கும் கோவணமும் நமக்கு சொந்தமாகாது...





முடிசார்ந்த மன்னரும் முடிவில் 
பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே !!!