Saturday, 26 November 2016

ஆட்டுவிக்கிறான் அவன் ஆடுகின்றோம் நாம்

ஓம் நமசிவய

தேச பற்றும், தெய்வ பக்தியும் மற்றவர் சொல்லிக்கொடுத்து வருவது அல்ல
கடவுளே இல்லை என்பவனும் அவன் முன்னால் ஓர் நாள் சரணடைவான்
கடவுளே கதி என கிடப்பவனும் ஓர் நாள் கடவுள் இல்லை என்று சொல்லிச்செல்லக்கூடும்...

தேசப்பற்று எனும் உணர்வு மனதில் இயற்கையாய் வரவேண்டும். அதுபோல ஒருவனை வற்புறுத்தி தெய்வ பக்தியை வளர்க்க கோவிலுக்கு அழைத்து சென்றாலும் அவன் இறை நம்பிக்கை கொள்ள மாட்டான். அவனுக்கான நேரம் வரும்போது பகவானே அவனை காத்து தன்னுள் ஈர்த்துக்கொள்வான்

நாம் செய்யும் செயல்களனைத்தும் சர்வ வல்லமை கொண்ட ஈசனுடையது.
நாம் வெறும் பொம்மைகள் தான்.
நல் எண்ணங்களையும் தெய்வ பக்தியையும் வளர்த்துக்கொண்டால் நாம் எங்கே செல்லவேண்டுமோ அங்கே அவன் கரை சேர்ப்பான்.


இந்த உலகின் தாய் தந்தை அனைத்தும் நானே, படைப்பவனும் காப்பவனும் அழிப்பவனும் நானே அழித்ததை மீண்டும் படைப்பவனும் நானே செயல்களைனைத்தும் நானே என பகவான் ஶ்ரீகிருஷ்ணன் கீதையில் கூறுகிறான்.

உலகில் ஒவ்வொரு நொடியும் என்ன நடக்க வேண்டும் என்பதை அவனே முடிவு செய்கிறான். நம் எண்ணங்களால் தான் நாம் இன்ப துன்பங்களை அடைகிறோம்,

ஆட்டுவிக்கிறான் அவன்
ஆடுகின்றோம் நாம்..

இதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் அருமையாக விளக்கியிருப்பார்...

ட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா


ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா


பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா


கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா



எப்போதும் நன்மையே செய்வோம்..
தீமைகளை ஒழிப்போம்





ஓம் நமசிவய
ஜெய் ஶ்ரீராம்