Friday, 15 April 2016

அறிமுகம்

கலியுகாப்தம் ஶ்ரீ துர்(ன்)முகி ஆண்டு சித்திரை 2 5117 ஆம் ஆண்டு




ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

க்லௌம் கம் கணபதயே வர

வரத சர்வ ஜனம்மே

வசமானய ஸ்வாஹா


உலகிற்கே முழுமுதற்கடவுளாகிய விநாயகப்பெருமானை வணங்கி என் முதல் பதிவை தொடங்குகிறேன்.


உலகில் இருக்கும் அனைத்து ஹிந்து உடன்பிறப்புகளுக்கும் என் பணிவான வணக்கங்கள்

இந்த வலைப்பக்கம் ஹிந்து தர்ம சேவைக்காக சிவருத்ரன் எனும் புனைப்பெயரையுடய இந்த சிவனடிமை உருவாக்கியுள்ள தளம் ஆகும்...

இந்த வலைப்பக்கத்தில் எனக்கு தெரிந்த விசயங்களை அனைவருடனும் பகிர்கிறேன்...

இதில் நான் இடும் பதிவுகள் சில என் சொந்த கருத்துகளாகவும் சில பதிவுகள் பல்வேறு வலைப்பக்கங்களில்/ புத்தகங்களில் திரட்டியதாகவும் இருக்கும்...


நான் வாழும் வரை ஹிந்து தர்ம சேவையே எனக்கு முக்கியம் அதற்காக என்னை தயார்படுத்தி இந்த பூமிக்கு அனுப்பிய என் அப்பன் ஈசனையும் அன்னை பார்வதியையும் இந்த பூமியைகாத்துக்கொண்டிருக்கும் சகல தெய்வங்களையும் பாதம் பணிந்து வணங்குகிறேன்....

என் குலம் காக்கும் குலதெய்வம் பாப்பினி ஶ்ரீ பெரியநாயகி அம்மனையும் மடவிளாகம் ஆருத்ரகபாலீஸ்வரரையும் பாதம் பணிந்து வணங்குகிறேன்...
 





சர்வம் சிவமயம்


சிவனின்றி ஓர் அணுவும் அசையாது....




ஓம் நமசிவய

No comments:

Post a Comment